குப்புறப்படுத்து தன் முஷ்டியை தன் தரையில். கோபத்தோடு குத்திக் கொண்டிருந்த ஆதியின் கன்னத்தில் பட்டாம் பூச்சியின் சிறகுகள் மோதியது போல் ஒரு மென்மையுடன் பிஞ்சுக் கைகள் அறைந்தன. ஒன்று இரண்டு மூன்று நான்கு என விடாமல் அடிகள் விழ அதோடு சேர்ந்து ஓங்கி ஒலித்த அழுகுரலால் தன் கோபத்தின் கோரப் பிடியிலிருந்த ஆதி விழித்துக் கொண்டு தலை தூக்கினான்
அவன் கண் முன்னே குழந்தை பிரியா கால் மடக்கி உட்கார்ந்திருந்தாள். அவள் கண்களில் தாரை தாரையாய்க் கண்ணீர்.
என்ன. அவன் முன்னே ஒரு சிறு குழந்தையா?அது ஏன் அழுகிறது கண்ணைக் கசக்கிக் கொண்டு யோசிக்க முயன்றான் ஆதி. ஆனால் தூக்கிய அவன் தலைமுடிக் கற்றையைப் பிடித்து ஆட்டிய படி கத்தி அழுதாள் குழந்தை. குழந்தையின் இறுக்கிய பிடியில் இருந்து தன்ன தலை முடியை விடுவித்துக் கொள்ளப் போராட வேண்டியிருந்தது ஆதிக்கு.
“ஆதி, ஆதி”. என்று குரல் கொடுத்தபடி மூச்சு இறைக்கத் தாய் தன்னை நோக்கி ஓடி வருவதையும் அவனின் முதுகு நரம்புகள் அவனுக்கு அப்போது தான் உணர்த்தின.
“பிரியா கையை எடு உன் கையெல்லாம் அழுக்காயிடுச்சு பார். நாம திரும்பப் போகலாம்”.என்று சொல்லிய படி ஒரு பெண்ணின் கைகள் அவன் கைகளோடு சேர்ந்து அவனது தலை முடியை விடுவிக்க முயற்சி செய்தன.
அந்த மென்மையான பெண் குரலின் மென்மையில் பிரியா தான் பிடித்திருந்த முடிக் கற்றை விட்டாள். தன்னுடைய தலை விடுபட்ட உடன் நிமிர்ந்து உட்கார்ந்த ஆதி தனக்கு உதவி செய்த பெண்ணின் முகத்தை ஏறிட்டான்.
இருவர் கண்களும் சந்தித்த அந்தவினாடி அவளின் வாய் “ஆதி” என்று ஆச்சிரியத்துடன் முணுமுணுத்தது. வியப்பால் கண் சுருக்கிய ஆதியின் தோளை அவன் தாய் தட்டினார்
“எந்திரிப்பா ஆதி என்னப்பா இப்படிப் பண்ணிட்டே?” உனக்கு ஒன்றும் இல்லையே தாய் மூச்சு இறைக்கும் குரலில் வினாவ முகம் திருப்பினான் ஆதி.
உமாவிற்கு அது போதுமாய் இருந்தது. இவனைப் பற்றி இரவு யோசிக்கலாம். இப்போதைய அவசரம் பிரியாக் குட்டி
அவள் அழுகையில் திமிறத் திமிற அவளைத் தூக்குக் கொண்டு. கடற்கரை மணலில் கால் பதிய முடிந்த அளவு வேகமாக அன்னம்மாவையும் மற்ற குழந்தைகளையும் நோக்கி நடந்தால் அவள்.
அடம் பிடித்து அழும் குழந்தை பிரியா. தன் கைகளையும் கால்களையும் உதைத்தது மட்டுமல்லாமல் பிரியாவின் கழுத்தில் ஆழமாகத் தன் பற்களைப் பதித்ஹ்துக் கடித்து விட்டாள்
“ஆ” என்று வலியில் அலறிய போதும் உமா தன் வேகமான நடையை நிறுத்தவில்லை.
ஒரு வழியாக அனைவரும் பள்ளிக்கு வந்து சேர்ந்தனர். ஆனால் அதற்குள் பிரியா இன் பற்கள் பட்ட காயத்திலிருந்து இரத்தம் கசிய ஆரம்பித்து இருந்தது.
காயத்தைப் பார்த்த அன்னமா ஆயா பதறி விட்டாள்.
“உமா கண்ணு நான் குழந்தைகளைப் பார்த்து சரியா அவங்க அவங்க அம்மா அப்பா கூட வீட்டிற்கு அனுப்பிடுவேன் நீ உடனே. ஆட்டோ பிடிச்சு ஆஸ்பத்திரிக்குப் போ” என்று அவளை விரட்டினாள்.
உமாவும் தன் தந்தையைச் செல்பேசியில் அழைத்தாள். அவரிடம் விவரத்தைச் சுருக்கமாகக் கூறியவள் அன்னமாவின் உதவிக்கு இருக்கும் படி அவரைக் கேட்டுக் கொண்டாள். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் அவர் அதனால் மகளுக்கு உதவி செய்வதில் அவருக்குப் பிரச்சனை இருக்க வில்லை.
தாயாரும் ஒரு தமிழ் ஆசிரியை தான் ஆனால் பள்ளியில் இருந்து ஆறு மணிக்கு மேல் தான் வர வேண்டும். அதனால் தனியாகவே உமா மருத்துவ மனைக்குச் சென்றாள்.
தாயோடு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தான் தந்தையும் நிறுவனத்திலிருந்து வீடு நோக்கி வந்து கொண்டு இருக்கிறார் என்று தாயின் செல்பேசி உரையாடலில் இருந்து புரிந்து கொண்டான்.
யாரிடமும் எதுவும் பேசப் பிடிக்கவில்லை.அதனால் கண்முடி தலையைக் கார் ஜன்னல் மீது சாய்த்திருந்தான்.
மூடிய கண்களுக்குள் அந்தப் பெண்ணின் கண்கள்? யாரிவள்? எங்கேயோ பார்த்திருக்கிறான்! அவள் கூட அவனை அடையாளம் கொண்டு அழைத்த மாதிரி இருந்ததே!
அவனை அடையாளம் காண்பது கடினமில்லை தான்.
ஐந்து வருடங்களுக்கு முன்னால் வரை இந்தியாவிற்காகப் பல சர்வதேச ஹாக்கிப் போட்டிகளில் கல்ந்து கொண்ட விளையாட்டு வீரன் இவன்.
ஆனால் இப்போது?
கால்கள் வேலை செய்யாத முடவன்
வெறுப்பும் துக்கமும் தொண்டையை அழுத்த தானாகக் கை முட்டிகள் இறுகின.
எல்லாம் ஒரு கார விபத்தினால் தான். அன்று கால் முட்டிகள் உடைந்ததற்கு விபத்தில் உயிர் போயிருக்கலாம். தலையிலும் பலமாக அடிபட்டது தானே! அடிபட்ட வேகத்தில் உயிர் போயிருந்தால் இந்த அவல நிலை ஏன்? தொண்டையை அடைத்த துக்கமும் வெறுப்பும் கோபத்தைத் தலைக்கு ஏற்றியன. கோபத்தின் வேகத்திற்கு ஏடு கொடுக்கத் தன். தலையைக் கார ஜன்னலில் மோத ஆரம்பித்தான்.
அவனுடைய கோபத்தின் வேகத்தில் சில மோதல்களில் கார் கண்ணாடி சில்லுச் சிதறல்களாய் வெளியே கொட்டியது.
அதிர்ந்து போய் ஓட்டுநர் வண்டியை நிறுத்தினார்
“ஆஆதி” அம்மா அலறினாள்.
ஆதியோ நிதானமாக
தன் வலது கையை எடுத்துக் கதவில் மிச்சமாய் ஒட்டிக் கொண்டிருந்த கண்ணாடியின் கோரப் பற்களில் தன் கையைக் கீறிக் கொண்டான்