<a href="http://anitham.suganthinadar.com/byline/suganthi-nadar/" rel="tag">Suganthi Nadar</a>, <a href="http://anitham.suganthinadar.com/byline/%e0%ae%9a%e0%af%81%e0%ae%95%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d/" rel="tag">சுகந்தி நாடார்</a> | அநிதம்
சமையலறையில்
அம்மா
முன்னறையில்
அப்பா
படுக்கையறையில்
அக்கா
அவள்
பக்கத்தில் தம்பி
வாசலில்
காவல் காக்கும்
இயந்திரக் குதிரையில்
படுத்துக் கிடக்கும்
அண்ணன்
அவன்
காலடியில் தங்கை
தோட்டத்தில் தாத்தா
அருகே
காலாற நடக்கிறார்
பாட்டி
பேசிக் கொண்டன
நாயும் பூனையும்
தனித் தனி தீவுகளாய் மனிதர்கள்
உள்ளங்கையில்
தாங்கி நிற்கின்றனர்
“கூகுள்”
காட்டும் “உலகம்”