நகரைப் பசுமையாக்குவோம்!

ஆலமரம்
Suganthi Nadar | அநிதம்

“நம்பினோர்க் கெடுவதில்லை” என்பது தமிழில் வழங்கும் ஒரு பழமொழி. இந்தப் பழமொழி பொதுவாக இறைத்தன்மையின் மேன்மையைக் குறிக்கக் கூறப்படுகின்றது. ஆனால் இயற்கை என்பதே இறைமை என்பதை உலகத்தின் இருண்ட வருடமான 2020 மனித இனத்திற்கு உணர்த்தியுள்ளது. ஒரு சிறு நுண் உயிர் மனிதனுக்கு உயிர் பயம் கொடுத்து முடக்கி வைத்து விட்டது மனித இனம் வரலாற்றின் தொடக்கத்தில் இயற்கையைத் தான் வழி பட்டு வந்தனர். ஏனெனில் அவர்களால் கட்டுப்படுத்ட முடியாத ஒரு சக்தியாக இயற்கை இருந்தது, ஆனால் தொழில் புரட்ச்சியும் அண்மைகால கணினிப்புரட்சியும் மெல்ல மெல்ல இயற்கையிடமிருந்து நம்மை விலக்கி வைத்தது. செயற்கைப் பொருட்களால்நம்மை நாமே சூழ்ந்து கொண்டு நாம் வசதியாக இருப்பதால் இயறகையை அடக்கி விட்டதாய் நினைத்து இருக்கின்றோம், ஆனால் இன்று மீண்டும் இயற்கை வென்று விட்டது.
தொழில் முறையில் விண்ணில் பறக்கும் விமானமும் பல்வேறு மொழி விமான நிலையங்களுமெ என் போன்ற பலருக்கு நிரந்திர குடியிருப்பாக மாறி விட நிலத்தில் வேர் விட்டு வளர்ந்திருக்கும் மரங்களுடன் நேரம் செலவிடமுடியாத ஏக்கத்தை, வெளிபடுத்தும் விதம் ஓவியம். அப்படித் தான் மரங்களை என் ஓவியங்களில் வரைய ஆரம்பித்தேன்.ஏறத்தாழ இருபது படஙகளை வரைந்து கொண்டிருந்த ம் நிலையில் கல்லூரி நட்புக்களான திரு சரவணன் அவர்களும் திரு சந்தோஷ் அவர்கள் Oisca நிறுவனம் பற்றி கூறினார்கள்.
OISCA சர்வதேச நிறுவனம் ஜப்பான் தேசத்தைத் தலைமையிடமாகக் கொண்டது. இந்த நிறுவனம் தொழிழ், ஆன்மீக கலாச்சார மேம்பாட்டிற்காக ஒநாட்டின் மக்களால் உருவாக்கபப்ட்ட அரசு சர்பற்ற நிறுவனம்(NGO) ஆகும்1961ல் ஐ.நா சபையில் பொது கலந்தாய்வுக் குழுவில் இந்நிறுவனம்ஏற்றுக் கொள்ளப்பட்ட.து. 1985ல் இருந்து இந்த நிறுவனத்தின் தென்னிந்திய அலுவலகம் கேரள மாநிலம் கோழிக்கோடு நகரில் இயங்கி வருகின்றது. சூழ்நிலைப் பாதுகாப்பையும் இளைஞர்கள் முன்னேற்றத்தையும் பற்றிய அறிவுசார் செய்திகளைப் பகிர்ந்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கல்லூரி பள்ளி மாணவர்களிடையே நிகழ்வுகளை நிகழ்த்தி வருவதே இந்த நிறுவனத்தின் முதன்மையான குறிக்கோள் ஆகும். இதுவரை பள்ளிகளில் பசுமையை நேசி (Love Green Club)என்ற பெயரில் 1770 குழுக்களும் பசுமையைப் பாதுகாப்போம்(Safe Green Club)என்ற 150 குழுக்கள் கல்லூரிகளிலும் உள்ளன. தென் இந்தியாவில் இந்த நிறுவனத்தின் சேவையைப் பாராட்டி இந்திய அரசு1998ல் இந்திரா பிரியதர்ஷிணி விருக்‌ஷமித்ரா(Indira Priyadarshini Vrikshamitra Award)விருதினை வழங்கியுள்ளது. தற்போது இந்த நிறுவனத்தில் 107 கிளைகளும் 5000 உறுப்பினர்களும் உள்ளனர்.
இயற்கைக்கு மதிப்பும் மரியாதையும் கொடுக்கும் தனி மனிதர்கள் நிறைந்த ஒரு தோட்டமாக வளர்ந்து நிற்கும் ஒரு நிறுவ்னத்தின் ஒரு அங்கமாக அதன் செயல் பாடுகளில் என்னை ஈடு படுத்திக் கொள்ள இயற்கை கொடுத்த வரமல்லவா? ஒரு நாள் நானும் மண்ணில் இறங்கி மரம் நடும் வாய்ப்பு எனக்கும் கிட்டியது இந்த நிறுவனத்தின் ஒரு அங்கத்தினராக இருப்பதால் தான்.
வாழ்வின் பெரிய பெரிய ஆசீர்வாதங்கள் சில சபயங்களில் நாம் இடுப்பில் சொருகும் சுருக்குப் பைக்குள் ஒளிந்து கொண்டு இருக்கின்றது என்பதை உணர வைக்கும் தருணம் தான் நிறுவனத்தின் கோவைக் கிளையில் இணைந்து உலக சுற்று சூழல் நாள் அன்று மருத்துவ மரங்கள் நடுவதற்கான வாய்ப்பு.

Suganthi Nadar | அநிதம்

அங்கு வந்திருந்த இயற்கையை நேசிக்கும் நல்லுங்களுக்குப் பரிசாகக் கிடைத்த இன்னொமொரு வரம் சக்கரை நோய்களைக் குணப்படுத்தும் செடி

Suganthi Nadar | அநிதம்

“பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா – நின்றன்
பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா

என்றான் பாரதி.இன்றோ பசுமையை நாம் செயற்கையில் தான் காணும் படி செங்குத்துத் திண்காரைக் காடுகள் தான் இரவையும் பகலையும் அலங்கரிக்கின்றன. Oisca நிறுவ்னத்தின் தமிழ் நாட்டுக் கிளை இந்தியாவில் இந்த நிறுவ்னம் தோன்றிய 35 ஆண்டு நிறைவைக் கொண்டடும் வகையில் ஜீன் மாதம் 22ம் தேதியை பசுமை தினமாகக் கொண்டாடியது.

Suganthi Nadar | அநிதம்

மரங்களிலிருந்து விழும் பழங்கள் மக்கி விதையாகி மீண்டும் மரமாய் உயிர்ப்பிக்க முடியாமல் காரைத் தரைகளில் விழுந்து அழுகிக் கருவிலேயேக் கலைந்து போகின்றன.

Oisca நிறுவனத்தின் ஒவ்வோரு நிகழ்வுகளும். சென்னை வண்ணாரப்பேட்டையில் சிங்காரத்தோட்டத்தின் வணிக வளாகத்தின் காரைத் தரையில் மடிந்து விட்ட எலுமிச்சம் செடியையும் ஓசூர் இரயில் நிலையப் பாதையில் இருக்கும் புனித தோன்பாஸ்கோ விளையாட்டுத் திடலில் இன்ரும் நிற்கும் மரமும், குற்றாலம் செல்லும் சாலையில் உள்ள நன்னகரதில் இன்று கட்டிடங்களாய் மாறி நிற்கும் புளிய மரங்களையும் அதில் வாழ்ந்த குரங்குக் கூட்டத்தையும், அதே இடத்தில் ஓங்கி வளர்ந்து இருக்கும் பாம்பு வடிவப் பொந்து கொண்ட வில்வ மரத்தையும், மதுரையில் இருந்த வாழைக் கன்றுகளையும் பெங்களூர் சாலைத் தோட்டஙகளையும் . அமெரிக்க தேசத்தில் மகளுக்கு மகளாய் வளர்ந்து பல்வேறு பறவைகளுக்கு வீடாய் இருக்கும் மேப்பிள் மரமும் நினைவில் வந்து உணர்வு பூர்வமான நிலையிலும் அறிவு பூர்வமாகச் சிந்தித்து செயல் பட வைக்கின்றது. Oisca நிறுவனத்தின் செயல் பாடுகளும் அதன் மூலம் கிடைக்கும் நட்புப் பூக்களும், முக்கியமாக வேலைகளூக்குள்ளே முடங்கி விடமால் கலையில் கவனத்தைச் செலுத்தவும் இன்று உதவுகிறது. இணைய வழி கிடைத்த இந்தத் தோழமை மனதைப் புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ள இந்தப் பேரிடர் காலத்தில் உதவுகின்றது.

வானத்தைக் கிழிக்கும் தடித்த செங்குத்துத் திண்காரைகளில்
செவ்வக கண்ணாடிச் சிறைகளில் அடைக்கப் பட்ட வெளிச்சச் சிதறல்கள்
நச்சுக் கிருமிக்கு தொடர்ந்து பலியாகும் நகரங்கள்!

என்று மனிதமே தள்ளாடிக் கொன்டு இருக்கின்ற நிலையில் வீடு என்ற சிறையில் நம்மைப் பூட்டி இயற்கையை சார்ந்த மற்ற உயிரினங்களுக்கு காட்சிப் ப்ருளாக மாறிவிட்ட நிலையில் இயற்கையை நம்புவதன் முக்கியத்துவம் புரிகிறது. இயற்கையைக் காப்போம் நோயின் பயத்திலிர்ந்து விடுபடுவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *