“]
வானம் உண்டு
ஆதவன் இல்லை
பறந்து திரிய
பறவைகளுக்கோ,
மனமே இல்லை
மேகம் உண்டு
மழையே இல்லை
அசையாக் காற்றுமே உண்டு
களிப்படைய
உயிர்கள் தானே
இல்லை
விறைத்து நிற்கும்
மரங்களும் உண்டு
பாடும் குயில்கள் இல்லை
ஆடும் இலைகளும் இல்லை
குச்சி குச்சியாய்
புதர்கள் உண்டு
பக்கத்திலே புல்லுமே இல்லை
புல் மேய வரும்
முயல்களும் இல்லை
ஓடிப் பிடிக்கும்
அணில்களும் இல்லை
பேருக்க்குக் கூட
பூக்கள் இல்லை
குளிரும் பனியும்
மூடிய
கல்லறையில்
கருவாய்
நான்