நினைவுகள் இறக்காதவரை
உன்
ஆன்மா எனக்குள்
ஆயிரம் கதைசொல்லும்
காலத்தையும்
வேகத்தையும்
கனமின்றி
கணப்பொழுதில்
கடக்கவைத்த -நீ
கதைபேசாத
நொடிகளை
காணிக்கையாக
தந்து நிற்கையில்
யாவும்
காலத்தின் கட்டாயச்சுமையாக
கணக்கிறது நண்பா!
உன் குரல்
எனக்குள் ஊடுருவிய
அந்த நொடிகளின்
நினைவுகள்
இறக்காதவரை
உந்தன் ஆன்மா
எந்தன் ஆன்மாவை
தாங்கித் தரணியில்
வாழ்வளிக்கும்
இறக்காத வரத்தையும்
கையளிக்கும்.