மரத்தின் கவிதை
பாலும் தேனும்
ஊறி வழியும் சோலையில்
எச்சத்தில்
புதைந்த விதையாய்
விழுந்தேன்
நான் துளிர்க்க
ஒளியே விழி திறப்பாய்
என்றேன்
கருமேக வானில்
காலமானது அது
மழையே வா
மண்ணுக்கே உயிர்
நான் தரவே
கூவிஅழைத்தேன் நான்
காற்றில் பறந்து கிழிந்த
காகிதமானது மேகமே
காற்றே வா
களிப்புடனே ஆடலாம் நாமே
காதலாய்ச் சொன்னேன்
ஐயகோ
கரும்புகையானதே அதுவும்
ஓங்கி வளர்ந்து விரிந்து
காய் கனியும்
நிழலாகவே நானும்
கனவிலே வளர்கிறேன்
என் வேர்
அழுகியிருப்பது தெரியாமல்