இயல்பான மனிதத்திற்கு எதிர்பதமாய்
தாயகம் தொலைத்த துயரும்
தடம் புரண்ட வாழ்க்கையும்
ஆண்டாண்டு காலமாய்
அழுத உள்ளமும் சிரித்த முகமுமாய்
நடிக்கும் நடிப்பும்
எதிர் காற்றில் பறக்கும்
குருவியின் சிறகுகளாய்
கருப்புக் காகிதத்தில் விழுந்த
வெள்ளைப் புள்ளியாய்
எரிந்து வீழ்ந்த காட்டின்
தணல் குளிர்ந்த சாம்பலில் பூத்த
ஒரு பூவாய்
அம்மாவாசை இருட்டில் மிளிரும்
துருவ நட்சத்திரமாய்
காலம் கொடுத்த கைவிளக்கு
இருட்டில் வெளிச்சம்!
யாருக்காக?