வணங்குவோம் நம்மை!
!
- என்ன சொல்ல வருகிறேன் என்று புரியாதவர்கள் என் மேல் கடும் கோபம் கொள்ள வாய்ப்புகள் அதிகம்
ஆனால் நாம் வணங்குவது கர்த்தராக இருக்கட்டும், கருமாரி அம்மனாக இருக்கட்டும் இல்லை முக்காடு இட்டு மசூதியில் தொழும் போது நாம் என்ன கேட்கிறோம்?
நம்முடைய வாழ்க்கை பாதையில் நம்முடன் நாம் வணங்கும் இறைசக்தி நம்மைக் காக்க வேண்டும் என்று விரும்புகிறோம்
இன்ப துன்பம் என்று எவை நம்மைச் சூழ்ந்தாலும் கடவுள் நம்மோடு இருக்கிறார் என்று விடாப்ப்டியாக நம்புகிறோம்
நம்முடைய பிரச்சனைகளை தீர்க்க அந்த இறை சக்தி நமக்கு உதவ வேண்டும் என்று இறைஞ்சுகிறோம்
நம்முடைய கெஞ்சுதலுக்கு இரங்கி தெய்வம் நம்மோடு நடந்து வருகிறது என்றால் எப்படி நடந்து கொள்ளும்?
சாலையில்நடந்து போகும் போது சாலஈல் எச்சில் துப்புமா?
யாராவது நம்மை இடித்து விட்டால் கண்டபடி ஏசுமா?
இல்லை
நாள் முழுவதும் தொலைக்காட்சி முன் தான் உட்கார்ந்து இருக்குமா?
அதுவும் இல்லை எனக்கு இன்னத் தேவை இருக்கிறது? கையில் காசில்லை கடன் தாருங்கள் என்று வெட்கமில்லாமல் கேட்குமா? இல்லை தானே?
எது எப்படி நடந்தாலும் கருணையான பார்வையும் கனிவு மாறாத புன்னகையும் தெய்வத்தை விட்டுப் போகுமா?
நான் கடவுள் இல்லை மனிதன் தான் என்று சொல்லும் என் குரலே எனக்குக் கேட்கிறது.
உண்மை தான்
ஒரு மனித உடல் தன்னைத் தானே கடவுள் எனக் கூறிக் கொள்வது அபந்தம் தான்.
ஆனால்
சாலையில் எச்சில் துப்பாமல் ஒரு மனிதனால் நடக்க முடியும்
தம்மை இடிப்பவரிடம் சண்டை போடாமல் மனிதத்தால் முடியும்
தொலைக்காட்சியை அணைக்கும் ஒரு வழியைக் கூட கண்டு பிடித்ததது ஒரு மனிதம் தான்
கடன் வாங்காமல் இருப்பது கொஞ்சம் கடினமான வேலை தான்.
ஆனால் பிறரின் பேராசைக்கு இடம் கொடுக்கும் கிம்பளம் தராமல் நம் தேவைக்காக மட்டும் வாழ்ந்தால் நிச்சயமாக ஒரு மனிதனால் முடியும்.
இதற்கெல்லாம் ஒரு மனிதனுக்குத் தேவை தன்னொழுக்கம் தான்.
தன்னோழுக்கத்தை நமக்கு நாமே தினமும் காலையும் மாலையும் சொல்லிக் கொள்வது நம்மை நாமே வணங்குவதற்குச் சமம்.
நாம் அனைவரும் அதைச் செயல் படுத்த முயற்சிப்போமாக
ஏன் என்றால் நம்மை நாமே மனிதனாக நடத்தும் தகுதியும் உரிமையும் நமக்கு இருக்கிறது.