வெற்றி நிச்சயம்!

வெற்றி நிச்சயம்!

 கொண்டாடலாம்
செய்யும் போது தான்   வெற்றியின் பயணம் ஆரம்பமாகிறது!

கொண்டாடலாம்!

ஒவ்வோரு புத்தாண்டும் மனிதர்களாகிய நாம் ஒரு குறிக்கோள நம்முடைய ஒரு இலக்காக வைக்கிறோம்.
ஆனால் அதி; வெற்றி அடைய ஆசையும் குறிக்கோளும் இருந்தால் மட்டும் போதுமா?

ஒரு மனிதன் தன் குறிக்கோளை அடையத் தேவையானது நான்கு

      உடல் உள்ள நலங்கள்
      தனிக் கவனம்
      விடா முயற்சி
    அளவுகோல்கள்

குறிக்கோள்களை வெற்றிக் கரமாக அடைய முதல் அடிப்படையைப் புரிந்து கொண்டு உடல் உள்ள நலன்களைப் பேண வேண்டும்.

உடல் உள்ள நலன்களைப் பேணுவது என்பது ஒவ்வோரு தனிப்பட்ட நபரின் சொந்த விஷயம். அதுவே கூட ஒரு சிலரின் அடிப்படைக் குறிக்கோளாய் இருக்கலாம், உடல் பயிற்சி தியானம், புத்தகங்கள் வாசித்தல்,இயற்கையோடு ஒன்றி வாழுதல் ஆகிய பழக்கங்கள் உடல் உள்ள நலன்களைப் பேண உதவும் அடிப்படை அன்றாடச் செயல்கள் ஆகும்.

 ஒருவர் தன் குறிக்கோள் என்ன என்பதில் தனிக் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

தனிக் கவனம் விடா முயற்சி என்ற இரண்டு உரங்கள். ஒருவர் தன் குறிக்கோள் என்ன என்பதில் தனிக் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். அன்றாட வாழ்க்கைச் சூழலில் அவரது குறிக்கோளைப் பற்றிய கவனம் சிதறாமல் இருப்பதில் முயற்சியுடன் முனைய வேண்டும் தினமும் ஒரு அரை மணிநேரமாவது குறிக்கோளை அடையும் செயலில் நாம் இறங்க வேண்டும்

 குறிக்கோளை அடையத் தேவையான திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

எல்லா உயிரினங்களுக்கும் திறமை உண்டு. அவற்றின் வாழ்வாதாரத்தைப் பொருத்தும் சூழலைப் பொருத்தும் அதன் திற்மையைவளர்த்துக் கொள்கிறது. ஆனால் இன்றைய சூழலில் ஒரு மனிதன் கல்லூரி சென்றால் மட்டுமே தன் திறமையை வளர்த்துக் கொள்ளுதல் என்ற எண்ணம் பலரிடையே உள்ளது. திருமணமான பெண்களோ குடும்பத்தின் அன்றாட நிகழ்வுகளில் தங்கள் திறமைகளை மறக்கிறார்கள். ஆண்களும் பெண்களும் பொருளாதாரம் ஈட்டுவது ஒன்றே சரியான திறமை என்று கருதுகிறோம்.
அது உண்மையா? யோசித்துப் பார்ப்போம். இன்னும் பலர் வெட்டியாகப் பொழுதைக் கழிக்கிறோம்.பொழுதுபோக்கிற்கு என்று நாம் தொலைக்காட்சிப் பெட்டி, சமூகத் தளங்கள் போவதை நிறுத்தி அவற்றை நம் திறமையை வளர்க்கும் ஒரு சாதனமாகப் பயன்படுத்தினாலே ஒரு தனிமனிதன் தன் திறமையை வளர்த்துக் கொள்ள நேரமும் வாய்ப்பும் அதிகமாகும்.

 குறிக்கோளை எந்த அளவிற்கு அடைந்திருக்கிறோம் என்ற அளவுகோல் தேவை.sky

ஜனவரி ஒன்றாம் தேதி, தைப் பொங்கல், சித்திரை ஒன்றாம் நாள் என்று நாம் கால தேவதைக்கு புத்தாடைக் கொடுத்து கொண்டாடுகிறோம்.

ஏன்? எதற்காக?

ஒரு இரவுக்கும் ஒரு பகலுக்கும் இடையில் அப்படி என்ன மாற்றம்?

கடிகார முள் 12:00 என்று காட்டுவதற்கும் 12:01 என்று காட்டுவதற்கும் இடையில் என்ன நிகழ்கிறது?

எப்போதும் போல சூரியனும் சந்திரனும் அவர் அவர் பாதையில் செல்கிறார்கள்.

பல கோடி உயிரினங்களையும் அவற்றை ஆளும் மனித இனத்தையும்,அவனது உயிரற்ற உடைமைகளையும். உபயோகமற்ற கழிவுகளையும் தாங்கும் புவிக் கோளம் தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது

அவற்றின் செயல்களில் எந்த மாற்றமும் இல்லை.

மரம் செடி கொடிகளும் காலத்திற்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ளத் தான் செய்கின்றன. ஆனால் காலம் நேரத்தை அவை வகுக்கவில்லை. ஆனால் தட்ப வெப்ப நிலைகளுக்கு ஏற்ப தங்களை அமைதியாக தங்களை மாற்றிக் கொள்கின்றன.

அதற்குக் காரணம் survival instincts.

இது மனிதம் என்ற உயிரினத்திற்கு வரும் ஒரு தனிப்பட்ட மாற்றம்.காலம் நேரம் நாள் கணக்கு என்று தனக்குத் தானே வகுத்துக் கொண்டு அதில் ஒரு சில தினங்களைச் சிறப்பாக கருத வேண்டிய காரணம்?

அவன் உடலில் ஏற்படும் மாற்றத்தை உள்ளம் ஏற்க மறுக்கிறது.

உடல் பழைய பொருளாக. தன்னை வயதானவனாக ஏற்றுக் கொள்ள மனம் தய்ங்கிறது

அதற்கும் காரணம் survival instinct.

மண்ணோடு மண்ணாகிப் போகும் உடலுக்குள் இருக்கும் உயிர் என்ற உன்னத சக்தி உயிர்ப்புடன் இருக்கத்துடிக்கிறது.

தனக்குத் தானே நம்பிக்கையை ஊட்டி ஆனந்தத்தை தன்னுள்ளே நிரப்பிக் கொள்ள வாய்ப்பை உருவாக்கிக் கொண்டுள்ளது.

இதை ஒருவர் புரிந்து கொள்ளும் போது அவருடைய resolutions வெற்றி அடைய வாய்ப்பு இருக்கிறது.

அவ்வப்போது அடைய வேண்டிய குறிக்கோளை நோக்கிய பயணம் எங்கே உள்ளது என்ற மீள்நோக்கலும் ஒருவருக்குத் தேவை.இந்த மீள்நோக்கலுக்கான ஒரு நாளாக இந்தச் சிறப்பு நாட்களாக வைத்துக் கொள்ளலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *