தன்னுறுதி

உறுதி தெரியும்! ஆனால் தன்னுறுதி?

அந்தத் தன்னுறுதி பெண்களுக்குக் கட்டாயம் அவசியம்தன்னுறுதி

ஆங்கிலத்தில்Assertive என்று சொல்லப்படும் சொல்லின் தமிழாக்கம் தான் தன்னுறுதி

<pநம் தமிழ் கலாச்சாரம் மேற்கத்திய நாடுகளிலிருந்து உடை உணவு பொழுது போக்கு தொழில் நுட்பம் என்று பல விதங்களில் தன்னை மாற்றிக் கொண்டாலும் இந்த. தன்னுறுதி பற்றி மட்டும் ஏற்றுக் கொள்ளவே இல்லை.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்
நம் கற்பனையின் கதாப்பாத்திரம்

எனக்கு கணக்குப் படிக்க வேண்டாம் நான் கிரிக்கெட் விளையாடுகிறேன்

என்று ஒரு பள்ளி மாணவனாகத் தன் பெற்றோரிடம் சொல்லட்டும்

அல்லது ஒரு மகளாக

“எனக்கு இந்தத் திருமணம் வேண்டாம் வேறு மாப்பிள்ளை பாருங்கள்”

என்று சொல்லட்டும்

ஒரு கணவனாக தன் மனைவியிடம்

“என் பெற்றோர் நம்முடன் தான் இருப்பார்கள்” என்று சொல்லட்டும்

ஒரு மனைவியாக தன் கணவன் வீட்டுக்குத் திரும்பி வரும் போது அவரிடம் சொல்லாமல் தோழிகளுடன் கிளம்பி திரைப்படத்திற்குச் செல்லட்டும்.

இந்தச் சூழ்நிலையில் நம் கதாப்பாத்திரங்களின் நிலை என்ன
சுற்றிச் சூழ இருப்பவர்களின் நாக்கு தரும் சொல்லடிகள், அதையும் தாண்டி கைகள் தரும் அடிகள் கொட்டுகள் கால்கள் தரும் மிதிகள் உதைகள் அன்பு காட்ட வேண்டியவரின் பராமுகம், தண்டிக்க வைக்கும் மேளனம் என்று ஒரே எதிர்மறைசூழலில் நம் கதாப் பாத்திரங்கள் தள்ளப்படுகிறார்கள்.

அதாவது சுற்றுச்சூழலுக்கும், சுற்றி இருப்பவர்களுக்கும் ஏற்ப நம் கதாப்பாத்திரங்கள் இயங்கத் தவறினால் அங்கே பூகம்பம் தான் தினம் தினம்.!

மற்றவர்களோடு விட்டுக் கொடுத்து சகிப்புத்தன்மையோடு மன்னித்து மறந்து வாழ்வது இயற்கை தான். அது தான் சரியான வழியும் கூட.
ஆனால் உறவுகளில் ஒருவரே விட்டுக் கொடுக்க வேண்டும் என்ற ஒரு கலாச்சாரமாக நாம் இருக்கிறோம்.

வயது பதவி அனுபவம் உறவு முறை. என்று பல கோணங்களில் மற்றவர்களுக்கு மரியாதை செய்ய வேண்டும் என்ற ஒரு கட்டாயத்தில் இன்று நாம் நம்மை இழந்து கொண்டு இருக்கிறோம்
சுய மரியாதையோடு சுய சிந்தனையையும் இழந்து அடைத்து வைத்த புளி மூட்டைகளாய் கூட்டத்தோடு கூட்டமாய் மேய்ந்து மலையிலிருந்து விழும் செம்மறி ஆடுகளாய் இன்னொருவர் கைக்குள் ஆடும் ஆட்டப் பொம்மைகளாய் ஆகி விட்டோம்.
விளைவு

  • எங்கும் எதிலும் லஞ்சம்
  • கலாச்சார சீரழிவு
  • தாய் மொழி இழப்பு
  • உடைந்து நொறுங்கிய உறவுகள்
  • சீரழிக்கும் தொலைக்காட்சியின் பிம்பங்களோடு மட்டுமே தொடர்பு
  • பொருளாதார சீரழிவு
  • ஆக முடியாத இயற்கையின் அழிப்பு

ஏன்?
நாம் நம்முடைய ஆளுமையை மற்றவர்களின் மகிழ்ச்சிக்கு அடிமைப் படுத்தி விட்டோம்.
அதாவது ஒருவருக்கு ஒருவர் ஒரே சமநிலை ஆளுமையைக் கொடுக்க மறுக்கிறோம்
இங்கே ஆளுமைக்கும் சுதந்திரத்திற்கும் உள்ள வேறுபாட்டை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பகவான் கிருஷ்ணன் கூடச் சொல்கிறார்

உன் தேவைக்காக நீ போராடாவிட்டால். நீ இழந்தவற்றிற்காக நீ அழாதே

அதாவது நம் மனதில் நினைப்பது சரி என்று பட்டால் அதைச் செய்யும் தன்னுறுதி நமக்கு வேண்டும்.
நம்முடைய முடிவுகளால் நம்மை வளர்த்துக் கொள்ள முடியுமானால் அதைச் செயல் படுத்துவதில் தயக்கம் கூடாது.
எதிர் வரும் தடைகளை மிக மென்மையாக எதிர்ப்பவர்களின் மனம் கோணாத வண்ணம் தாண்டி செயல் படுத்த வேண்டிய சாதுரியம் வேண்டும்.
தன் தேவைகளை ஆணித்தரமாக எடுத்துக் கூறும் மன தைரியம் வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *