தமிழ் வளர்க்க ஒரு கவிதை
மரத்துக்குக் கவிதை
பிறந்த மண்ணுக்குக் கவிதை
பூவுக்குக்குக் கவிதை
புல்லுக்குக் கூடக் கவிதை
பூவைச் சுற்றும் வண்டுக்கும் கவிதை
வண்டைத் தின்னும்
பறவைக்குக் கவிதை
பரந்து கிடக்கும்
வானத்திற்குக் கவிதை
வானத்தில் இருக்கும்
மேகத்துக்கும்
மேகத்தில் மிதக்கும் வெண்ணிலவிற்கும்
கவிதை
இரவின் வைரங்கள்
நட்சத்திரத்திரங்களுக்கும் கவிதை
கவிதை
கவிதை
எதற்குமே கவிதை
எல்லாமே கவிதை
எல்லாரும் கவிதை
பிரபஞ்சமே
ஒரு கவிதை
கவிதையின் கவிதையே
கன்னித் தமிழே
தாயே! தமிழே!
உனக்கு ஒரு கவிதை
தமிழனாய்க் கவிதை
தமிழால் பிறந்த கவிதை
கவிதை இது கவிதை
தமிழ் வளர்க்கப் பிறந்த கவிதை