அகந்தை
உன்
வட்டம் பெரியது
என்
வட்டம் சிறியது
உன்
வட்டம் நீர்குமிழி
என்
வட்டம் கற்குகை
…..
என்
வட்டம் உன்னுள்ளே
உன்
வட்டம் என்னுயிர்
என்
வட்டம் உன் மரணம்
உன்
வட்டம் வளர்க்கும்
என்
வட்டம் பிணைக்கும்
உன்
வட்டம் விரிக்கும்
என்
வட்டம் நெருக்கும்
உன்
வட்டம் பெருக்கும்
என்
வட்டம் உடைக்கும்