சாயிரா

 

Suganthi Nadar | அநிதம்

“அல்லது ஆழ் கடலில் உள்ள பல இருள்களைப் போன்றது. ஓர் அலை அதை மூடுகிறது. அதற்கு மேலே மற்றொரு அலை. அதன் மேலே மேகம். ஒன்றுக்கு மேல் ஒன்றாகப் பல இருள்கள். அவன் தனது கையை வெளிப்படுத்தும் போது அதைக் கூட அவனால் பார்க்க முடியாது. இறைவன் யாருக்கு ஒளியை ஏற்படுத்தவில்லையோ அவனுக்கு எந்த ஒளியும் இல்லை.” (24:40)

அதிகாலை 3 மணிக்கெல்லாம் எழுந்து  ஓட்டப்பயிற்சிக்குத் தயாராகிக் கொண்டிருந்தாள் சாயிரா. ஏழரை மணிக்குப் பள்ளியில் இருக்கவேண்டும். இன்றிலிருந்து  பண்டிகை குடும்பத்தினர் எழுவதற்குள் இவள் தன் ஓட்டப்பயிற்சியையும் மற்ற தடகள பயிற்சிகளையும் முடித்து விட்டு வந்தால்  விடியும் முன்  தாய் தம்பியோடு பிரார்த்தனை, பிறகு உணவு உட்கொண்டு விட்டு பள்ளிக்குக் கிளம்ப சரியாய் இருக்கும். இந்த மாதம் முழுவதும்  அவளுடைய உடலுக்கும் ஓட்டப் பயிற்சியும்  ஒரு சோதனை காலம் என்றாலும் 13 வயது சாயிராவிற்குஅச்சோதனையைச் சவாலாகவே எடுத்துக் கொள்ள ஆசை. ரமதான் மாதத்தில்  உடலையும் வருத்தி பயிற்சியிலும் ஈடுபட்டு இறை அச்சத்தோடு செயல்பட்டால் ஒலிம்பிக் விளையாட்டுகளில் கலந்து கொள்ள அவளுக்கு வாய்ப்புக் கிடைக்கலாம்.  வரும் டிசம்பர் மாதத்தில் அதற்கான முதல்நிலை தேர்வு பள்ளியில் நடக்கும் என்று  விளையாட்டு ஆசிரியர் இரண்டு வாரத்திற்கு முன்னால் கூறியிருந்தார். ஜீன் மாத பள்ளி விடுமுறையில் விளையாட்டுக்கான கோடை வகுப்புக்களில்  சேர தாய் ஆயிஷா மூலம் தான் தந்தையிடம் அனுமதியும்  வாங்க வேண்டும்.

சிகாகோவில் கோடைக் காலம் ஆரம்பித்து விட்டாலும் காலை மூன்றரை மணிக்குக்  சில்லென்று குளிராகத் தான் இருந்தது. அவள் அணிந்து இருந்த முக்காட்டை மறைத்த படி குளிருக்கான மேல் அங்கியால் உச்சந்தலையில் மூடிக் கொண்டுக் குடியிருப்பைச் சுற்றிக் கொண்டு ஓட ஆரம்பித்தாள் சாயிரா. ஒரு மணிநேரத்தில் குடியிருப்பைச் சுற்றி இருபது சுற்று ஓடி விட்டு வீட்டுக்குள் நுழைந்தாள். குடும்பத்தில் உள்ள புனித நாள்  வாழ்த்து தெரிவித்து தந்தையின் ஆசிக்காக அவர் முன்னால் வந்து நின்றனர் சாயிராவும் கூடவே தம்பியும். “இந்த  மாதம் முழுவதும் அல்லாவிற்கானது.நடப்பது  அனைத்தையும் அவருக்கே அர்ப்பணிக்கும் வழக்கத்தை நாம் கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் அறிவுரை கூற பள்ளி சென்றாள் சாயிரா

கல்வி ஆண்டின் இறுதி மாதம் என்பதால்தேர்வுகளைப் பற்றிய சிந்தனையும் பேச்சுமாக மாணவர்கள்  வகுப்பிற்குச் செல்லும் வழியான முன்  வரண்டாவில் நடந்து கொண்டு இருந்தனர். வகுப்புத் தோழிகளோடு பேசியபடியே நடந்து கொண்டிருந்த சாயிரா தன் தலையைப் பின்னாலிருந்து  யாரோ இழுப்பது போல உணர்ந்தாள்/

அடுத்த வினாடி “ஆ” என்ற அலறலோடு தரையில் விழுந்திருந்தாள் அவள். கையிலிருந்த புத்தகங்கள் சிதறிவிழ  முதுகில் மாட்டியிருந்த புத்தகப்பையின் மேலேயே தாறுமாறாக விழுந்துவிட்டாள் அவளது அடர் கூந்தல் தரையில் பட்டுக் கம்பளமாய் படர்ந்தது..தான் அலங்கோலமாக இருக்கிறோம் என்ற உணர்வை விட  ஏதோ பறி போனது போல ஒரு  அவமான உணர்வு கிளர்தெழ  சாயிராவின் கண்களில் கண்ணீர் பெருகியது.

“ஹா ஹா ஹா”என்று நான்கு ஐந்து பேர் சிரிக்கும் சத்தம் கேட்டு  அனைவருமே திரும்பிப் பார்த்தனர். அவள் வகுப்பு மாணவர்கள் தான்  நடுவில் நின்றிருந்தவன் மைக்கேல்  கையில்  சாயிரா  தலையை முக்காடு இட்டுக் கொள்ளும் கறுப்பு ஹிஜாப் தொங்கிக் கொண்டு இருந்ததது. துடித்துப் போன  அச்சிறுமி தலையைக் கைகளால் மூடிக் கொண்டு பெண்கள் கழிப்பறையை நோக்கி வேகமாக ஓடினாள். “எவ்வளவு  அழகான கருங்கூந்தல் இவள்  இப்படியே விட்டுவிட்டால் எவ்வளவு அழகாய் இருக்கும்” என்று யாரோ அவள் பின்னால் சொல்லிக் கொண்டு இருந்தார்கள்.

கழிப்பறையில் உட்கார்ந்து தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்த சாயிராவிற்கு  அவள் தோழிகளின் குரல்கள் எதுவுமே கேட்கவில்லை. பள்ளித்  தலைமை ஆசிரியையே வந்து  கழிப்பறையை தட்டி இரண்டுமுறை  “சாயிரா, சாயிரா” என்று அழைத்து, “சாயிரா உன் ஹிஜாப்” என்று கதவின் மேல் இருந்த இடைவெளி வழியாக  அவளது முக்காட்டுத் துணியை  நீட்டிய பின்  தான் மற்றவர்கள் தன்னை அழைக்கிறார்கள் என்று உணர்வே அச் சிறுமிக்கு வந்தது.ஹிஜாபை வாங்கி  தன்   தலையில் சாயிரா    கட்டிக் கொண்டு இருக்கும்போதே “வெளியே வா சாயிரா “என்று தலைமை ஆசிரியர் கனிவாக ஆங்கிலத்தில் உத்தரவிட்டார்.

சாயிராவும்  தயங்கித் தயங்கி  ஆங்கிலத்திலேயே” எனக்கு, எனக்கு அப்பாவிடம் பேச வேண்டும்” என்றாள்.

தலைமை ஆசிரியரும் “நானே அவர்களை அழைக்கத் தான் போகிறேன்” என்றார்.

ஹிஜாபைக் கட்டிக் கொண்ட போதும் சிறு விசும்பல்களுடனே கழிப்பறையிலேயே உட்கார்ந்து இருந்தாள் சாயிரா. வகுப்பில் வரலாறு தேர்வு ஆரம்பித்து இருக்கும் என்ற சிந்தனையோ கவலையோ அவள் மூளைக்குள் எட்டிப்பார்க்கவே இல்லை. யாரையும் பார்க்கக் கூட அவமானமாக இருந்தது. மீண்டும் மீண்டும் ஹிஜாபை தலையில் இறுக்கமாகக் கட்டிக் கொண்டாள்  எவ்வளவு நேரம்  ஆனதோ, தாயின் குரல் கழிப்பறைக் கதவின் மறுபுறம் கேட்டவுடன்  தான் கதவைத்  திறந்து கொண்டு  வெளியே வந்தாள்.

தாயைக் கண்டதும்,  அவரது இடுப்பை இறுக்கக் கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.”அம்மா,அம்மா  நான்  தலையில் ஹிஜாபை சரியாக இறுக்கமாகத் தான் கட்டி இருந்தேன். இது எப்படி என்றே  எனக்குத் தெரியவில்லை அம்மா?” அழும் மகளைத் தேற்றும் விதமாக “எல்லாம் சரி தான்  நீ தவறு செய்ததாக நானோ வாப்பாவோ நினைக்கவே இல்லை” என்றபடி மகளின் ஹிஜாபை சரி செய்தாள்.” வா    தலைமை ஆசிரியரிடம் பேசி விட்டு வகுப்பிற்குச் சென்று  தேர்வு எழுதும் வழியைப் பார். தேர்வில் நல்ல மதிப்பெண்  வாங்குவது பற்றி   யோசி என்றபடி தலைமை ஆசிரியரின் அறைக்கு மகளைக் கூட்டி வந்தாள் தாய்.  அறையில் தந்தையைப் பார்த்ததும் அவரது அருகில் வேகமாகச் சென்று அவரது நாற்காலிக்குப் பின்னால் நின்று கொண்டாள். மகளின் முதுகையும் தோளையும் வருடிக் கொடுத்த படி  பின்னால் நின்று கொண்டாள் தாய் ஆயிஷா.

“சாயிரா வருவதற்காகத் தான் காத்திருந்தோம். அதனால் இப்போது நாம்  தொடங்கலாம்”, என்று தலைமை ஆசிரியை தொடங்கி வைக்க,அடுத்த நடந்த உரையாடல்கள் ஆங்கிலத்திலேயே நடந்தன.

” என் பையன் செய்ததும்  தவறுதான்.  சிறுவனான  அவனுக்கு அது ஒரு வேடிக்கையாக இருந்திருக்கலாம். ஆனால் பெரியவர்களாகிய எங்களுக்கு அவன் என்ன ஒரு இழிவுச் செயலை செய்து விட்டான் என்று புரிகிறது. மன்னித்து விடுங்கள்.” பேசவும் தான் அறையில் மற்ற நான்கு பையன்களில் பெற்றோரில் ஒருவர் வந்து இருப்பதைக் கண்டாள் சாயிரா.மாணவர்களின் பெற்றோர் இருவரில்  ஒருவரே வந்திருப்பதும் தனக்கு இருவரும் வந்திருப்பதும்  அவளுக்கு ஒரு பாதுகாப்பு உணர்வையும், தைரியத்தையும் கொடுத்தது..  தோளின் மேலிருந்த தாயின் கையை நன்றியோடு அழுத்தினாள்.

முதலில் பேசியவரைத்  தொடர்ந்து மற்ற பெற்றோரும் பேசினர்.

“எங்கள் பையன் குறும்பு தான். நான் ஒத்துக் கொள்கின்றேன். ஆனால் பள்ளிக்கு  மற்றவர்கள் அணிவது போல் அணியாமல் ஏதோ விநோதமாக அணிந்திருந்தால்  இயற்கையாகவே சுட்டிப் பயன் ஒரு சின்ன விளையாட்டு விளையாடி விட்டான். அதற்குப் போய் பெரிய விஷயமாக எடுத்து, எல்லோர் நேரத்தையும் வீணாக்குகின்றீர்கள். இதையெல்லாம் நாம் பெரிது படுத்திப் பிரச்சனையாக்கவே கூடாது”.என்றார்   ஒரு பையனின் தாய்

“நீங்கள் சொல்வது சரிதான், அமெரிக்காவில் வாழ  விரும்பினால் அமெரிக்கர்களைப் போல வாழ வேண்டும் உடை அணிய வேண்டும். உங்கள் நாட்டு உடையை நீங்கள் அங்கே சென்று அணியுங்கள். யாருக்கும் எந்தப் பிரச்சனையும் வராது” என்றார் அடுத்து அமர்ந்திருந்த ஒரு தந்தை.

கடைசியாகப் பேசியவர், “இவர்கள் தங்கள் பாரம்பரிய உடை என்று சொல்லிக் கொண்டு தங்கள் மதத்தை எங்கள் பிள்ளைகளுக்கப் போதிக்க முயற்சி செய்கின்றனர். இதைப் பள்ளியில் அனுமதிக்கக் கூடாது. பள்ளிக்கு ஒழுங்காக உடை உடுத்தி வர வேண்டும் என்று  சொல்லாமல் என் பையனை  குற்றம் சாட்டி நிறுத்தி வைத்து இருக்கின்றீர்கள்.   அவர்கள் தேர்வு எழுதுவதா வேண்டாமா? நல்ல மதிப்பெண்கள் தேர்வில்  எடுத்தால் தான் என் பையனை  கால்பந்து விளையாட்டு அணியில் சேர்த்துக் கொள்வேன்  என்று விளையாட்டு ஆசிரியர் சொல்கின்றார்.  இது போன்ற  பிரச்சனைகள் எங்கள் குடும்பத்திற்குத் தேவையில்லாதது”.

இவர்கள் பேசுவதைக் கேட்க கேட்க  சாயிராவிற்கு கோபமாக வந்தது. ஆனால் தலைமை ஆசிரியையும் தந்தையும் முகத்தில் சலனமே இல்லாமல் அமைதியான புன்னகையில் இருந்தனர். தாயோ தந்தைக்கு அஞ்சி தன் கோபத்தை மட்டுப் படுத்தினாள்.

தலைமை ஆசிரிரியரேத்  தொடர்ந்தார்.

“உங்கள் ஒவ்வொருவரின்  கருத்தும் உங்களுக்கு  சரியாகத் தோன்றலாம். பள்ளி விதி மறைகள் எப்படி அமைக்கப்பட வேண்டும் என்பது அடுத்தக் கட்ட பேச்சு ஆனால் நடைமுறையில் உள்ளபள்ளியின் விதிமுறைகளை. மாணவர்கள் கடைப்பிடித்தனரா?’ என்று மட்டுமே பார்க்க வேண்டிய கட்டாயம் எனக்கு என்ற படி மாணவர்களைக் கேட்டார்.

“நீங்கள் ஏன்  சாயிராவை விழத் தட்டினீர்களா?”

” ஒரு  விளையாட்டாய் அவளுடைய  முக்காட்டுத்  துணியை இழுத்தோம். அவள் கீழே விழுவாள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

“ஆனால் அவள் விழுந்த உடன் அவளுக்கு நீங்கள் உதவி செய்யவில்லையே நின்று சிரித்துக் கொண்டு இருந்ததாகத் தான் கூடியிருந்த மற்ற மாணவர்கள் கூறினார்கள்.”

தலைமை ஆசிரியரின் இந்தக் கேள்விக்கு மாணவர்கள் பதில் சொல்லாமல் அமைதி காத்தனர்.

“பள்ளியின் விதிகளை மீறிய உடையை  சாயிரா என்றாவது அணிந்து வந்து இருக்கிறாயா?” என்று அவளைக் கேட்டார் தலைமை ஆசிரியை. இல்லை என்று தலை அசைத்தாள் அவள்.

“இவர்களுடன் வேறு எதற்காவது வம்பு சண்டைக்கு  நீ சென்ற துண்டா ?” கேட்டார் ஆசிரியர்.”இல்லை”  என்றாள் சாயிரா

சாயிரா உண்மை பேசுகிறாளா?ஆமாம் என்று தலையாட்டினர் மாணவர்

உங்களை ஏதும்  தொந்தரவு செய்தாளா? மாணவர்களைக் கேட்டார்.இல்லை என்றே தலையாட்டினர்

ஒரு மாணவரின் உடமையையோ உடையையோ அவர் அனுமதி இன்றி தொடக்கூடாது என்ற விதி உங்கள் அனைவருக்கும் தெரியும் தானே? இந்த விதியை உங்களில்யார் யார் மீறினீர்கள் என்று கேட்டார். முக்காட்டை உருவிய மைக்கல் மட்டும் கையை த் தூக்கி “நான்”  என்றான்.

ஏன் அவளுடைய உடையை நீ அனுமதி இன்றி தீண்டினா ய்? தலைமை ஆசிரியர் கண்டிப்புக் குரலிலேயேக் கேட்டார்

“இவர்கள் தான்” என்று பக்கத்தில் இருக்கும் இரு நண்பர்களையும் காட்டி,, சாயிராவை கிண்டல் அடித்து அழ வைக்க அப்படிச் செய்ய சொன்னார்கள்?.சக மாணவரைக் கிண்டலடித்து  அழ வைப்பதும்  பள்ளி விதிகளின் படி தவறு தானே?  கேட்டார் ஆசிரியர்

ஆமாம் என்பது போல தலையாட்டினர் சிறுவர்

நீங்கள் பள்ளியின் இரு விதிகளை மீறியதால் சாயிராவிற்கு தலையில் பலமாக அடிபட்டிருந்தால்? விளைவு என்ன என்று யோசியுங்கள்..ஆபத்தான விளைவுகளைத் தடுப்பதற்குத் தானே விதிகள் உள்ளன. அதை மீறியதற்காக உங்கள் மூவரையும் மூன்று நாட்கள் தற்காலிகமாக பள்ளியிலிருந்து நீக்கம் செய்கின்றேன்.

“ஐயோ வேண்டாம் மேடம்” சாயிரா தான் முதலில் அலறினாள். “மூன்று நாட்கள் என்றால் இவர்களால் எந்தத் தேர்வையும் எழுத முடியாமல் போய்விடும். மதிப்பெண்கள் குறைந்தால் அடுத்த பள்ளி ஆண்டில்  நாங்கள்    சேர எண்ணியிருக்கும் விளையாட்டு அணியில் விளையாட எங்களுக்கு அனுமதி மறுக்கப் படலாம்.நான் கொஞ்சம் பயந்து விட்டேன். எனக்கு  ஒரு காயமும் இல்லை  ப்ளிஸ் மேடம்  வகுப்பு பள்ளி இறுதி நாட்களில் நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் நண்பர்களாகப் பிரியவே எனக்கு ஆசை அடுத்த ஆண்டு நாங்கள் அனைவருமே உயர்நிலைப் பள்ளிக்குச் சென்றுவிடுவோம். யாரை மீண்டும் சந்திப்போமா தெரியாதே” என்றாள்

பெற்றவர்களும் மாணவர்களும் அவளை ஆசிரியத்தோடு பார்க்க, தலைமை ஆசிரியை யோசனையோடு இதுவே உங்கள் நால்வருக்கும் முதலும் கடைசியான எச்சரிக்கை.  வகுப்புக்குப் போங்கள்.என்றார்.விட்டால் போதும் என்று சாயிராவும்  மாணவர்களும்  வகுப்பறைக்கு ஓடினர்.

“இப்படி எதற்கும் பயந்து அழுது ஒதுங்காமல், அதை நேரடியாகச்  சந்தித்து தீர்வு காண கற்றுக் கொடுங்கள் ஏன் என்றால் இது போன்ற பல அவமானங்களை அவள் தன் வாழ்க்கையில் கடக்க நேரிடும் என்பது  நீங்கள் அறியாது அல்ல. என்று சாயிராவின் பெற்றோருக்கும் அறிவுரை சொன்னார்“எங்கள் பெண்ணும் எதற்கும் அழுபவள் அல்ல. ஒரு இஸ்லாமியப் பெண்ணின் ஹிஜாப் பறிக்கப்படுவது என்பது அவளைத் துகிலுரிவதற்கு சமானம். சாயிராவின்  தந்தை தன் கோபத்தை எப்படி அடக்கிக் கொண்டிருக்கின்றார்  என்பது எனக்குப் புரியாத புதிராக உள்ளது.மதங்களையும் உடைகளையும் தாண்டி  மனிதரை மனிதராக மதிக்க உங்கள் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள். தேவை என்றால் பெற்றோருக்கும் கூட” என்று கூறிவிட்டு ஆயிஷா  அறையை விட்டு வெளியேறினாள். அவள் தந்தையும்  ஒரு தலை அசைப்பிலும் வெளியேறினார்.

காலையில் விட்டுப்போன தேர்வுகளை மாலையில் பள்ளி முடிந்ததும் எழுதிக் கொடுத்து விட்டு வீடு திரும்ப சாயிராவிற்கு நேரமாயிற்று.

வீட்டு முன்னால் தந்தையின்  சிற்றுந்தைப் பார்த்ததும் அவர் வீட்டிலிருக்கிறார் என்பதைப் புரிந்து கொண்டு  தயக்கத்துடனும் பயத்துடனும் உள்ளே நுழைந்தாள் சாயிரா. வழக்கத்திற்கு மாறாகத் தந்தை உணவு மேஜையில் அமைதியாக அமர்ந்திருக்க அம்மா ஆயிஷா தான் படபட வென்று பொரிந்து கொண்டிருந்தாள்.

“சொல்வது உங்களுக்கு எளிது. , பொறுமையோடு இரு, சகித்துக் கொண்டிரு” என்று  ஆனால் என்னால் தான்  முடியவில்லை. பிழைப்பிற்காக வந்து விட்டோம் அதற்காக நம் மானத்தையா நாம் விற்க வேண்டும்.?  இந்த  அமெரிக்காவில் அமைதியாக வாழ வேண்டுமென்றால் நம்  மதத்தையும்  பழக்க வழக்கங்களையும்  விட வேண்டுமா என்ன? அவர்கள் ஒவ்வொருவரும் பேசுவதைப் பார்த்தீர்கள் தானே.? கணவனுக்கு  தேநீரைக் கொடுத்த படி  அவள் பேசிக் கொண்டு இருக்கும் போது தான். சாயிரா உள்ளே நுழைந்தாள். இவளைக் கண்டதும் தாயின் ஆற்றாமை   அவள் சுருதியைக் கூட்டியது ” இதிலே இவளுக்கு ஒலிம்பிக்கில் ஓடணும்ன்னு ஆசை”

அம்மாவின் சொற்களைக் கேட்ட தகப்பனின் முகத்தில் அதிர்ச்சி,

பள்ளியில் ஏதாவது ஒரு விளையாட்டில் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பது   விதி .  நீச்ச்சல் கண்டிப்பாக  கிடையாது. மற்ற குழு விளையாட்டுகளில் கலந்து கொள்ள வேண்டுமானால் அடிக்கடி வேறு ஊர்களுக்குப்  பயணப்பட  வேண்டும் என்பதாலும் ஆயிஷாவின் ஆலோசனையின் பேரில் தட கள விளையாட்டில் சாயிரா பெயர்  கொடுத்து இருந்தது. இது வரை பள்ளி  நேரத்திலேயே ஓடுவதாலும் ,  பயிற்சிக்காக  நான்கைந்து பேர்   அணியாக் ககுடியிருப்பைச் சுற்றியே ஓடுவது என்பதாலும் பிரச்சனையே இல்லாமல் இருந்தது. ஆனால் இனி எப்படியோ?

தந்தை  என்ன  சொல்வாரோ என்ற பயத்தில் தம்பியுடன் தொழுகைக்குத் தயாரானாள் ஆயிஷாதொழும் போது  தமக்கையின் கண்களிலிருந்து கண்ணீர் பெருகி வழிவதைத் துக்கத்தோடு பார்த்துக் கொண்டு இருந்தான் சிறுவன் அன்வர். குழந்தைகள் தொழுகையை முடித்து இருப்பார்கள் அவர்களை  அழைத்துப் பேசும் எண்ணத்தில்  ரஹீம் குழந்தைகளை நாடிச் சென்றார். ஆயிஷா கொஞ்சம் பொறுமை இல்லாமல் ஏதாவது சொல்லி விடக் கூடும்.  அறையின் கதவின் அருகில்  சென்றவர் காதுகளில்  அன்வரின்  குரல் கேட்டது

” ஏன் அக்கா அழுதுகிட்டே இருக்கிறே?  அழாதே அக்கா நீ அழுதா அல்லாவிற்கு வருத்தமா இருக்கும்”.”அல்லாவிற்கு வருத்தமா? ஏண்டா?” அக்கா கேட்ட கேள்வியே தந்தைக்கும். மகனின் பதிலுக்காக காத்து இருந்தார்.

” என்ன  சொன்னார்?  நடக்கிற  எல்லாமும் அல்லாகிட்ட கொடுக்க நாம பழகணும்ன்னு இன்னைக்கு காலையில் அப்பா சொல்லலை.அல்லாவிற்கே  அனைத்தும் அர்பணம் ன்னு  சொன்னால் நீ சந்தோஷமாத் தானே இருக்கணும்.? நீ அழுதியான , நீ அவரை நம்பவில்லை என்று அல்லாவிற்குத் தோணுமே!. அந்தச் சின்னக் குழந்தை புரிந்தும் புரியாமலும் கேட்டான்”

“அது இல்லைடா பள்ளிக்கூடத்தில் நான் ஒருத்தி தான் பல வருஷமா ஒரு விளையாட்டிலும் சேராம இருந்தேன். எல்லாரும் கிண்டல் செய்றாங்கன்னு தான் இந்த ஓட்டப் பயிற்சியிலும் கலந்து கொள்ள ஆரம்பித்தேன் அதுவும் அல்லாவிடம் தொழுது தொழுது அதறகுப்புறம் தான்  அம்மாவிற்கு இந்த யோசனையேத் தோணுச்சு  இப்ப என்ன ஆகுமோன்னு பயம்மா இருக்கு”

“என்ன நடக்கும் ஒண்ணும் நடக்காது. அல்லா தான் உன்னை எவ்வளவு அருமையா வேகமா ஓட வைக்கிறார்.  அல்லா தன்னை நாடியவர்களை நேர்வழி நடத்துகிறான் என்று அன்று கூட அம்மா எனக்கு குரானிலிருந்து படித்துக் காட்டினார்களே?” கேள்வி கேட்டான் தமையன்

என்னவோ போடா எனக்கு ஒரே குழப்பமாகவும் பயமாகவும்   என் வகுப்பு பையன்கள் மேலையும் கோவம் கோவமா வருது”.

மக்கள் இருவரின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த ரஹீம் அங்கு வந்த மனைவி ஆயிஷாவையும்  சத்தமின்றி அங்கிருந்து நகர்த்தினார்.

அடுத்த நாள் சாயிரா ஓடத் தயாரானபோது  தந்தையும் தம்பியும் கூடவே தயாராகி நிற்பதைக் கண்டு ஆச்சிரியப்பட்டு போனாள். ஆனால்  அமைதியாகவே  மூவரும்   ஓடத் தொடங்கினர்.ஒரு சுற்று ஓட்டம் முடிந்ததும் தந்தையும்   மகளும்  மட்டுமே ஓடினர்.”

ஓடுவது உனக்குப்  பிடித்து இருக்கிறதாம்மா?” தந்தை கேட்க புன்சிரிப்போடு தலை ஆட்டிவிட்டு தன் வேகத்தைக்க் கூட்டினாள் சாயிரா. துப்பாக்கியிலிருந்து பறக்கும்  தோட்டா போல்  ஓடும் மகளைப் பெருமையோடும் யோசனையோடும்  பார்த்த படி  தன் ஓட்டத்தைத் தொடர்ந்தார் முதல் முறையாக ஓடும் அந்தத்  தந்தை

சாயிராவிற்கு  தேர்வுகள் முடிந்தன.   பள்ளியாண்டின் கடைசி நாள்.வெள்ளி  அன்று மதியம்  மூன்று மணி  பள்ளி  இன்னும் அரை மணி நேரத்தில் விட்டு விடும். அந்த நடுநிலைப்பள்ளி மாணவர்கள் வகுப்பறை மேஜைகளைச் சுத்தம் செய்வதிலும்,  வராண்டாவில் உள்ள புத்தகங்கள் அடுக்கி இருக்கும் நிலைப்பெட்டிகளைச் சுத்தம் செய்வதிலும் முனைந்து இருந்தனர். சுத்தம் செய்து அடுக்கிய புத்தகப் பையை தன் தோளில் போட்டு ஏதேச்சையாக திரும்பிய சாயிராவின்கண்ணில் அது பட்டது.

அவளுடைய ஹிஜாபை இழுத்து விட்ட மாணவன் மைக்கேலின் சட்டையை ஒருவன் பற்றி இருந்தான். ஒரு கை மைக்கேலின் சட்டை காலரைப் பிடித்துத் தூக்கி இருக்க, இன்னோரு கையில் துப்பாக்கியை மைக்கேலின் நெற்றில் குத்திக் கொண்டிருந்தது. அலறவும் முடியாமல் அசையவும் முடியாமல் மைக்கேல் சிலையாகி இருக்க,  பல மாணவர்கள்  அலறிய படி அங்குமிங்கும் ஓட, தன்னிச்சையாக சாயிராவின் கையிலிருந்த புத்தகப்பை அவள் கையிலிருந்து  ஷாட்புட் குண்டு போலத்  துப்பாக்கியை நோக்கிப் பறந்தது. அதே வினாடியில்   முட்ட வரும் காளையாய் தலையை மடக்கியபடி, துப்பாக்கி ஏந்தியவனை நோக்கி ஓடினாள் சாயிரா. புத்தகபபை தாக்கி  துப்பாக்கி  விழுவதும், அதை ஏந்தி இருந்தவன் விலாவில்  சாயிராவின் தலை மோதி அவன்   தடுமாறி  பின்பக்கமாய் சரிவதும் ஒரே நேரத்தில் நடந்தன.  அரை வினாடிக்குள் நடந்து முடிந்தது  இந்தச் சம்பவம்.

ஆயுதம் இழந்த குற்றவாளியை ஆசியர்களும், பள்ளிக்குள்  தம் குழந்தைகளுக்கு உதவ வந்து கொண்டிருந்த  பெற்றோர்களும் பாதுகாவலர்களும் பிடித்து ஒரு அறையில் வைத்துப் பூட்டினர்.

மாலை வீடு வந்த ரஹீம் தன் வீட்டின் முன்னால் பத்திரிக்கையாளர்களும் தொலைக் காட்சி வண்டிகளும்  கூட்டமாய் குழுமி இருக்கப் பதற்றத்தோடு  சிற்றுந்தை  விட்டு இறங்கினார்.அவரைக் கண்டதும், ஓடி வந்து சூழ்ந்து கொண்டவர்கள்

“போதை மருந்து விற்பவனிடம் இருந்து ஒரு சகமாணவனை உங்கள் மகள் காப்பாற்றி இருக்கிறாள்.நீங்கள் என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்? “என்று கேட்க அதே பதற்றத்துடன்  வீட்டுக்குள் நுழைந்தார்.  வீட்டின் முன்னறையிலும்  கூட்டம். மகள். மனைவியில் மடியில் மகன். அன்னையின் தோளுக்குள் ஒளிந்து கொண்டு சிறுமி சாயிராவின் முகம்  காவலர்  கேட்டுக் கொண்டிருந்த கேள்விகளுக்குப் பதில் அளித்துக் கொண்டிருந்தாள்.

” மைக்கேலின் உயிருக்கும் மற்ற மாணவர்களுக்கும் ஆபத்து என்பது மட்டுமே  தான் எனக்குத் தோன்றியது. வேறு எதையும் நான் யோசிக்கவே இல்லை”.”

தந்தையைக் கண்டதும் தாயின் மடியிலிருந்த  அன்வர் அவரை  நோக்கி வந்தான்.   தன்னிடம் வந்த  மகன் அவர் தொடையைத் தட்ட என்னப்பா என்றபடி மகனை  நோக்கிக் குனிந்தார். ஆனாலும் மகளை விட்டு  பார்வை அசையவில்லை.

” மைக்கேலைப் பார்த்தாலே கோவமா வருது எரிச்சலா இருக்கு,அழுகையை நிறுத்த முடியலை  பயம்மாவும் இருக்குண்ணு”என்று  அக்கா சொல்லிக் கொண்டு இருந்தாளே? அப்புறம்  எப்படிப்பா அவளாலே மைக்கேலைக் காப்பாத்த முடிஞ்சது?”

அதற்குக் காரணம், அவளுக்கு அல்லா கொடுத்த ஒளி அன்வர்.  பயம் கோபம் எரிச்சல் அழுகைன்னு அலை அலையா மனதுக்குள் வருகிற இருளை விரட்ட சமயோசித புத்தியையும் தோட்டாவை விட வேகமாக ஓடுகிற திறனையும்அக்காவிற்கு அல்லா ரமதான் பரிசாகக் கொடுத்து இருக்கிறார்” “அல்லாஹ் யாருக்கு ஒளியை ஏற்படுத்தவில்லையோ அவனுக்கு எந்த ஒளியும் கிடையாது  ரஹீமின் வாய் மகனுக்குப் பதிலை மு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *