தமிழனுக்கு
அடையாளம்
பாரதியின் முறுக்கு மீசை
அது அன்று வரை!
இன்று முதல்
உன்
கூரிய கொம்புகளும்
திமிறிய திமிலும்
கருணைக் கண்களுமே!
வாழ்த்தி வணங்குறேன்
என்
விளையாட்டுத் தோழா!
என்னை எனக்கு
அடையாளம் காட்டியதற்கு!
என் குருதித் துளிகள்
உன்
நெற்றியில்
வெற்றித் திலகமாய்!
