ஒலிம்பிக் விளையாட்டில் பதக்கம் வாங்கிய வீராங்கனைகள், அமெரிக்க அதிபர் தேர்தலில் முதல் முறையாகப் பெண்மணி என்ற சூழலில் இந்தியாவில் இளம் பெண்கள் காதல் என்ற பெயரில் கொல்லப்படும் போது ஊடகங்களில் கோபம் கொந்தளிக்கிறது. இதைப் பற்றிப் பேசுபவர்கள் எல்லாம் பெண்மையின் காப்பாளராகத் தங்களையே நியமித்துக் கொண்டு பெண்மைக்காக வாதாடுவது பார்க்கவும் கேட்கவும் வாசிக்கவும் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் தீர்வு எங்கே என்று பார்க்க வேண்டாமா?
உண்மையில் பெண்மை என்ற சமுதாயத்தின் விதை விருட்சமாக வளருவதற்குள் தனக்கு ஏற்பட்ட இன்னல்களைத் தன்னுள் விழுங்கிய காரணத்தால் இந்த இருபத்து ஓரம் நூற்றாண்டின் சமுதாயம் மனித நேயம் மறந்த எரிமலை வெடித்த காடுகளாய் மாறிவிட்டன உலகின் எல்லா மூலைகளிலும் பெண்கள் குடும்பம் என்ற முக்கியமான அமைப்பின் அடிப்படை. ஏனென்றால் அவர்களால் தான் மக்கட்பேறு கொடுக்க முடியும். இண்டு பெண்கள் பல பட்டங்கள் பெற்றுப் பதவியில் இருந்தாலும் அவர்களுடைய முதன்மையான வேலைக் குழந்தை பெறுவதும் குடும்பத்தைக் கவனிப்பதும் என்று உலகமே நம்புகிறது. அதனால் அந்தக் கண்ணோட்டத்தில் பெண்கள் படும் இன்னல்களைப் பதறிய விழிப்புணர்வு அவசியமே. ஆனால் அதையும் தாண்டி கவனித்துப் பார்த்தால் பெண்கள் ஒரு காமப் பொருளாகப் போதைப் பொருளாகக் காட்டப்படுகின்றனர்.எத்தனைச் சிறுமிகள் காமுகர்களின் வெறிக்கு இரையாகி இருக்கின்றன. எத்தனை சிறுமிகள் உலகம் முழுவதும் விபச்சாரத்திற்காகக் கடத்தப்பட்டுச் சந்தையில் விற்கப்படுகிறார்கள்.
ஒரு ஆண் தன் காம வெறியைத் தீர்த்துக் கொள்ள அவன் காதல் என்ற போர்வையில் பெண்மையையே ஒரு கழிப்பறையாக உபயோகிக்கிறான் என்பது தான் உண்மை.
அமெரிக்கத் தேசத்தில் 2016 ல் மட்டும் 16,370 விபச்சாரத்திற்காகப் பெண் குழந்தைகள் கடத்தப்படடதற்கான வழக்குகள் உள்ளன. பெண் குழந்தைகள் வீட்டு வேலைக்காக இந்தியா முழுவதும் விற்கப்படுகிறார்கள். 2014-15ம் ஆண்டுகளில் 200000க்கும் மேற்பட்ட நேபாளிப் பெண் குழந்தைகளை இந்தியாவில் விபச்சாரத்திற்காக விற்று இருக்கிறார்கள்.
2014 ஆம் ஆண்டுப் பிறந்த ஆயிரம் குழந்தைகளில் 24 குழந்தைகள் 15 வயதிற்குக் குறைந்த சிறுமிகளுக்குப் பிறந்த குழந்தைகள். இதில் 89% திருமணமாகாதவர்கள். இந்தப் புள்ளி விவரங்களைப் பார்த்தவுடன் பெண்களின் உடை கலாச்சாரம் என்று அவர்களையே நாம் குறை கூறி விடுகிறோம்.
ஒரு பெண்ணின் நடை உடை பாவனைகளைக் குறை கூறிக் கொண்டு தங்களின் உடல் உபாதைகளைத் தீர்க்கும் ஒரு குட்டிச்சுவராகப் பெண்களைப் பாவிக்கும் ஆண்களை என்ன என்று சொல்வது? அன்பாய் ஆசையாய் வார்த்தைகள் காதல் கதை பேசி பெண்களைத் தன்னலத்திற்காகப் பயன் படுத்துவதோடு விட்டார்களா ஆண்கள்.
இது வீட்டிற்குள் ஏற்படும் வன்முறைகளை எவ்வளவு அழகாகச் சித்தரிக்கிறது. இந்தியாவில் வரதட்சணைக் கொடுமௌ, கணவன் குடிபோதையில் குடித்துவிட்டு வந்து அடிக்கும் கொடுமை என்றால் உலகம் முழுவதும் பல காரணங்களுக்காக அடி உதை வாங்குகிறார்கள். உடலுக்குத் துன்பம் விளைவிப்பதோடு, மனம் சிந்தை பொருளாதார வகையிலும் ஒரு பெண் துன்பப்படுத்த படுகிறாள் மூன்றில் ஒரு பெண் அவளுடைய தந்தையாலோ கணவனாலோ துன்பப்படுத்த படுகிறாள் என்கிறது உலக ஆரோக்கிய நிறுவனம். உலகில் கொல்லப்படும் பெண்களில் 38% பெண்கள் வீட்டுக்குள் நடக்கும் வன்முறையால் கொல்லப்படுகின்றனர் என்றும் அந்த நிறுவனம் புள்ளி விவரங்களைத் தருகிறது
பெண்களுக்கு ஏற்படும் பாலியல் கொடுமைகளையும் நடக்கும் வன்முறைகளையும் கண்டும் காணாமல் இன்றைய சமூகம் இருக்கிறது. பாலியல் கொடுமைக்கு உள்ளாகும் ஒவ்வோரு பெண்ணும் தன் வேதனைகளை உள்ளுக்குள் வாங்கி மரத்து ஒரு ஜடமாகி விடுகின்றாள் அப்படி ஜடமாகி விடுவதே இன்றைய சமூகம் சரி என்று ஏற்றுக் கொண்டுள்ளது. சீறி எழும் பெண்களைப் பைத்தியம், ஒழுக்கம் கெட்டவள் திமிர் பிடித்தவள் விபச்சாரி என்ற பெயரால் அழைத்துத் தன்னை ஒரு சரியானவளாகக் காட்டிக் கொள்கிறது.
இதையெல்லாம் மீறியக் கொடுமை பெண்களே பல நேரங்களில் பாலியல் கொடுமைக்கும் பெண்களுௐஅலை பலியாக்கும் வன்முறைகளுக்கும் மூலகாரணங்களாக இருக்கின்றனர்.
வாழ்க்கை ஓட்டத்தில் சிக்கி பெண்கள் தான் யார் என்பதை மறந்து விடுகின்றனர். வீட்டுச் சுமையையும் பணிச்சுமையையும் சமுதாயச்சுமை நாட்டுச்சுமையையும் தாங்கும் எத்தனையோ ஆளுமை உள்ள பெண்கள் மத்தியில் நிஜமாக வாழ்ந்தாலும் தொலைக்காட்சியிலும் திரைப்படங்களிலும் விளம்பரங்களிலும் பார்ப்பது தான் உண்மையான பெண்மை என்று மதி மயங்கி இருக்கின்றனர், புடவை நகை உணவு என்ற அடிப்படைத் தேவைகள் மிதமிஞ்சிய அளவில் இருந்தால் வாழ்க்கையில் வெற்றி அடைந்து விட்டதாகக் கருதுகின்றனர். ஒரு ஆணிடம் பெண் அடிவாங்குஇவதும் காதல் என்ற போர்வையில் காம களிப்பிற்காகப் பயன் படுத்தபப்டுவதுமமொரு சராசரி இயல்பான நிலை என்ற கருத்து அவர்களிடம் உள்ளது விளங்குகளைப் போல உன்னுவதும் உறங்குவதும் இனப்பெருக்கம் செய்வதும் மட்டுமா பெண்மை?
ஒரு பெண் அப்படித்தான் இருக்க வேண்டும் என்றால் அவளுக்கு உடை எதற்கு அவளும் வீட்டின் ஓரத்தில் மற்றவர்களின் மகிழ்விற்காக ஓடியாடும் ஒரு செல்ல பிராணியைப் போல ஒரு மூலையில் ஒதுங்கி இருக்கட்டுமே அவலுக்கு ஆடை எதற்கு அணிகலன் எதற்குக் கல்வி தான் எதற்கு?
எதுவுமே தேவையில்லை
ஒரு ஆணின் தற்பெருமை என்ற நெருப்பிற்கு விறகாகியிருப்பது தான் பெண்மை. குடும்பம் பிள்ளை என்று தன்னையே தியாகம் செய்யும் பெண்மை தான் யார் என்பதை மறந்து விட்டதோடு தான் யார் என்பதையும் தனகுள்ளே மறுக்க ஆரம்பித்து விட்டாள். அதனால் தான் பாலின சமத்துவம் பற்றிப் பேச வேண்டியிருக்கிறது. பெண்ணியம் பற்றிப் பெண்களுக்கே விழிப்புணர்வு கொடுக்க வேண்டியிருக்கிறது. விவசாயம். பூவுலகப் பாதுகாப்பு
இயற்கை உடல்நிலை பாதுகாப்பு என்று பாதுகாக்க வேண்டிய பிரச்சனைகளில் பெண்மையும் ஒன்று என்பது அவமானத்திற்கு உரியது
இன்றைய பெண்மையின் நிலை இது தான் என்ன கல்வி கற்று இருந்தாலும் என்ன வேலை செய்து என்ன சம்பாதித்து இருந்தாலும் அவள் ஏதாவது பெரிய சாதனைச் செய்யாவிட்டால் ஆணுலக்ம் அவளை மதிக்காது. ஒலிபிக்கில் பதக்கம் வாங்கிய மூன்று பெண்கலை இன்று கொண்டாடும் தேசம் மற்ற முப்பதாயிரம் பெண்கள் அல்லல் படுவதை பார்த்துக் கொண்டு என்ன செய்கிறது.
பொருத்தார் பூமி ஆழ்வார்
குனும்பம் ன்ன அ இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அறிவுரைகள். ஒரு பெண்ணுக்கு நடக்கும் கொடுமை ஊடகங்களில் பெரிதாகப் பேசப்பட்டால் உடனே அது அடுத்தச் சூடான செய்தி வரு வரை விவாத மேடைகளில் பேசப்படும், ஆனால் அதன் பிறகுஸஸின்று பல பெண்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர்
அவர்களின் குறை குடும்பத்ஹ்டில் ஒரு சமூகமான சூழ்நிலை அமைதியான சூழ்நிலை தன் திறமையை வெலிக்காட தேவையான சூழல் இல்லை என்பதே அதை அவள் ஒரு ஆணிடம் எதிர்பார்க்கிறாள். உணர்வு பூர்வமாக அன்பை ஆதரவை தன் தாயிடமிருந்து, மனைவியிடமிருந்து தமக்கையிடமிருந்து எதிர்பார்க்கும் ஒரு ஆணால் அதை அதே அளவு கொடுக்க முடியாத கையாலாகாத தனம் தான் பாலியலில் சமத்துவம் இல்லாததற்குக் காரணம். நாரணம். ஆணுக்கே அனபையும் ஆதரவையும் வழிகாட்டுதலையும் அள்ளி அள்ளி வழங்கும் ஒரு பெண் தனக்குத் தேவையான அன்பையும் ஆதரவையும் தனக்குத் தானே வழங்கத் தவறுவது ஏன்? ஒரு விருட்சம் தன்னைத் தானே பார்த்துக் கொண்டு மற்ற உயிர்களுக்கு உயிர் சக்தி கொடுப்பது போல ஒவ்வோரு பெண்ணும் தனக்குத் தானே உயிர் சக்திக் கொடுக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
ஆம் மரங்கள் தானாக வளர்ந்து தன்னைத் தானே பேணிக் கொண்டாலும் அதை வெட்டிப்போட ஒரு மனிதன் இருக்கத்தானே செய்கிறான் என்பது உங்கள் கேள்வி
?
ஆனால் கூர்ந்து பாருங்கள் அவன் மரங்களை வெட்டிப்போட்டுக் கட்டிய வீடுகளின் சாலை ஓரங்களில் கீறிக் கொண்டு ஒரு மரத்த்தின் வேர் ஒரு பக்கமாகவௌம் இரண்டடி உயரத்தில் இன்னோரு மூலையில் பெயர் தெரியாத இன்னோரு மரக்கன்று வளர்ந்து கொண்டு இருக்கும். மரம் வெட்டுவது நின்றால் மரத்திற்கு நல்லது தான். ஆனால் அது தான் நடப்பதில்லையே
நாம் எத்தனை முறை வெட்டிப்போட்டாலும் மரம் எப்படியோ எங்கேயோ வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது. மனிதன் வெட்டும் வேகத்திற்கு இணையாக அது வேகமாக வளரவில்லை என்றாலும் அது வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
பெண்மையைக் கொடுமைப்படுத்துவதும் அதற்காக வாதாடுவதும் ஊடகங்களுக்குத் தீனி போடுவதை மட்டும் தான் செய்து கொண்டு இருக்கிறது . ஓரளவு பெண்களுக்குத் தீங்கு ஏற்பட்டுவதைத் தடுக்க ஒரு வேலியாக அது செயல்படலாம். ஆனால் பெண் ஒரு மதிக்கப்படும் பெண்மையாக இருப்பது ஒவ்வொரு பெண் கையிலும் தான் இருக்கிறது. அது அவள் உடுத்தும் உடையில் இல்லை, உண்ணும் உணவில் இல்லை அவள் பெற்ற கல்வியில் இல்லை. அவள் உள்ளத்தில் உணர்ச்சிகளில் இருக்கிறது.தன்னைத் தானே பேணிக் கொள்ள நேரமும் அவகாசமும் கொடுத்து தன்னைச்சுற்றி ஒரு சூரிய வளையத்தைக் கவசமாகக் கொண்டு தான் வளரும் வாய்ப்புகளை உருவாக்கும் பிடிவாதத்துடன் நடந்தால் பெண்மை தனக்கே உரித்தான நிலையைத் தானாக அடைந்து விடும். அந்த நிலையை அடைய நேரம் பிடிக்கும் தான். ஆனால் பெண்மை ஒரு அடிமை இல்லை. அதற்கு அழிவும் இல்லை.ஏன் என்றால் பெண்மை வெறும் பாலினம் இல்லை. அது தான் உயிர் சக்தி. சமுதாயத்தை நேர் வழியில் நடத்தும் உந்து சக்தி