Suganthi Nadar | அநிதம்
ஒற்றைக்கால் தவமாய்
ஒரு பாதம் மேல் மறுபாதம் வைத்து
ஒற்றையடிப் பாதையில்
அடிமேல் அடி எடுத்து வைக்க
இருப்பதெல்லாம்
இருண்ட அகண்டத்தில் நுழையும் இருபதடி தூரமும்
இரெண்டு அடிகளை மட்டுமே காட்டும்
வெளிச்சமும் தான்.
கண்கட்டி
வாய் பொத்தி
செவி மூடி
நடக்கும் போது
“நான்”
என்பது மறந்து தான் போகிறது
விருட்சத்தை ஒளித்திருக்கும்
விதையிலிருந்து
வெளிவந்த வேரின்
இறைமை அது!