<a href="https://anitham.suganthinadar.com/byline/%e0%ae%9a%e0%af%81%e0%ae%95%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d/" rel="tag">சுகந்தி நாடார்</a> | அநிதம்
வேருக்குள் ஊற்றிய
வெந்நீராகினாய்
அடிமரத்தை அரிக்கும்
கரையானாகினாய்
தளிர் இலையைச் சுருட்டும்
நோயாகினாய்
கிளைகளை வெட்டி
எனக்கே.
வேலியாக்கினாய்
அழாமல் பூத்தேன்
பூக்களை கருக்கும்
புகையாகினாய்
வாடாமல் நின்றேன்
இடியாய்
இருட்டடித்தாய்
வாழ்வேன் என்றேன்
மின்னலாய் வெட்டினாய்
முறிந்து போன
என்னை…
கோடாலி எடுத்து
விறகாக்கினாய்
தூங்கிப் போன விதையாய்
துளிர்த்து எழுந்தேன்
ஆனந்தமாய் சிரிக்கிறாய்
எனக்கு
உன் மேல்
எத்தனை பாசமென்று!
வளர்வேன் மீண்டும்
நீ
கொல்வாய் என்று தெரிந்தும்!