• தமிழ் படிக்க தமிழில் படிக்க
  • தமிழின் திருவிளையாடல் – இலந்தை இராமசாமி.
  • கருத்தோவியங்கள்
    • Lord Muruga: அழகே… தமிழே…. முருகா
    • வெள்ளத்தனைய மலர் நீட்டம்
    • Thathithaa thoothuthi
    • மொட்டை முட்டை :An adaptation of Humpty Dumpty by W.W Denslow.
  • தமிழ் அநிதம் நூல்கள்
    • Lord Muruga: அழகே… தமிழே…. முருகா
    • Thathithaa thoothuthi
    • வெள்ளத்தனைய மலர் நீட்டம்
    • மொட்டை முட்டை :An adaptation of Humpty Dumpty by W.W Denslow.
  • சிறுவர் நூல்கள்
    • வெள்ளத்தனைய மலர் நீட்டம்
    • Lord Muruga: அழகே… தமிழே…. முருகா
    • Thathithaa thoothuthi
    • மொட்டை முட்டை :An adaptation of Humpty Dumpty by W.W Denslow.
    • வெள்ளத்தனைய மலர் நீட்டம்
  • தொடர்பு
அளவிலா ஆனந்தம்!
  • தமிழ் படிக்க தமிழில் படிக்க
  • தமிழின் திருவிளையாடல் – இலந்தை இராமசாமி.
  • கருத்தோவியங்கள்
    • Lord Muruga: அழகே… தமிழே…. முருகா
    • வெள்ளத்தனைய மலர் நீட்டம்
    • Thathithaa thoothuthi
    • மொட்டை முட்டை :An adaptation of Humpty Dumpty by W.W Denslow.
  • தமிழ் அநிதம் நூல்கள்
    • Lord Muruga: அழகே… தமிழே…. முருகா
    • Thathithaa thoothuthi
    • வெள்ளத்தனைய மலர் நீட்டம்
    • மொட்டை முட்டை :An adaptation of Humpty Dumpty by W.W Denslow.
  • சிறுவர் நூல்கள்
    • வெள்ளத்தனைய மலர் நீட்டம்
    • Lord Muruga: அழகே… தமிழே…. முருகா
    • Thathithaa thoothuthi
    • மொட்டை முட்டை :An adaptation of Humpty Dumpty by W.W Denslow.
    • வெள்ளத்தனைய மலர் நீட்டம்
  • தொடர்பு
September 24, 2016

” Iron man”

iron-man-933709_1920pixba

” Iron man” என்ற  சொல்லைக் கேட்டவுடன் பொதுவாக நம் மூளைக்குள் தோன்றும் படம் நாம் சிறு வயது சித்திரப் புத்தகங்களில் படித்த ஒரு அனாசாய சாகச வீரன். அவன் தன் இரும்பாலான தேகத்தால் எதிரிகளைக் காயப்படுத்தி அவர்களை எதிர்த்து நடத்தும் மோதல்களில் வெல்லுவான். இவன் ஒரு கதாசிரியரின், குழந்தைகளின் ஒரு கற்பனைப் பாத்திரம் மட்டுமே!

ஆனால் இன்றும் மதுரையில். ஒவ்வொரு குடியிருப்பின் வீதி முனைகளில் நீங்கள் இந்த “iron man” ஐக் காணலாம். மர நிழலில் காலையில் வந்து நின்று கொண்டு தன் பணியைக் தொடங்கும் இவர் ஒரு உளவாளி. அந்தக் குடியிருப்பில் உள்ள வீடுகளில் எத்தனைப் பேர் அவர்கள் வயது எங்கே வேலை செய்கிறார்கள்? குழந்தைகள் எந்தப் பள்ளிக்கு செல்கிறார்கள்? யார் யார் வீட்டில் என்ன வண்டி இருக்கிறது? எந்த வீட்டில் யார் தனியாக இருக்கிறார்கள்? எந்த வீட்டில் வெளிநாட்டுத் தமிழர்கள் வசிக்கிறார்கள் என்ற தகவல்கள் அத்தனிஅயும் அவனுக்கு அத்துப்படி ஒவ்வொரு வீட்டிலும் என்ன மாற்றங்கள் நிகழ்ந்தாலும் அது அவனுக்கு உடனுக்குடன் தெரிந்து விடும்.

இத்தனை விஷயங்களைத் தெரிந்து கொண்டு இருந்தாலும் அவன் ஒரு எளிமையான சாதாரண சாதாரணக் குடிமகன். பல சமயங்களில் அவனுடைய சிறு குடும்பமே அவன் பணி செய்யும் இடத்தில் இருக்கும். அவன் இரவு கண் உறங்க மட்டும் தான்.

அவன் தான் தெரு முனையில் நான்கு சக்கர வண்டியில் நம் துணிகளை தேய்த்துக் கொடுக்கும் சலவைத் தொழிலாளி.

வீட்டுக்கு வந்து அழுக்கு துணிகளை வாங்கிக் கொண்டு சென்று ஆறுகளிலோ நீர்நிலைகளிலோ துணிகளைத் துவைத்து, தேய்த்துக் கொண்டு வந்த வண்ணான் காலப் போக்கில் தெரு முனைகளில் நம் துணிகளை சுருக்கங்களைக் களைய , நிலக்கரி துண்டுகளால் சூடாக்கப் பட்ட இரும்புப் பெட்டியைக் கொண்டு இஸ்திரி போட்டு க் கொடுக்கும் சேவையைச் செய்கிறான்.

e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d<a href="https://anitham.suganthinadar.com/byline/suganthi-nadar/" rel="tag">Suganthi Nadar</a>, <a href="https://anitham.suganthinadar.com/byline/%e0%ae%9a%e0%af%81%e0%ae%95%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d/" rel="tag">சுகந்தி நாடார்</a> | அநிதம்

துணி தேய்த்துக் கொடுப்பவன்”iron man” ஆனது எப்படி?

வண்ணான், துணி தேய்த்துக் கொடுப்பவன், இஸ்திரி செய்பவன் என்ற வழக்குச் சொல் மாறி “iron செய்கிறவர்” என்ற வழக்குச் சொல் பழக்கத்திற்கு வந்தது. இப்போது செய்கிறவர் ஒரு ஆண் என்பதை சுருக்கமாகக் குறிக்க “man” என்ற ஆங்கிலச் சொல்லும். சேர்ந்து ” iron man” ஆகி விட்டார்.

என்ற சொல்லை ஒரு ஆங்கிலத்தில் சொல்லும் போது ஒரு பொருளும், அதே ஆங்கிலச் சொல்லை ஒரு தமிழன் பயன் படுத்தும் போது முற்றிலும் வேறு பட்ட பொருளைத் தருவது வேடிக்கையானதா? வேதனையானதா? சிந்திக்க வேண்டியதா!

துணி சலவை செய்பவனை என்பது ஆங்கிலத்தில் washerman என்றோ,laundry man எனவோ தமிழில் அழைக்க வேண்டும்.

“Iron man” என்றால் இரும்பு மனிதன். இரும்பால் ஆனவன், இரும்பைப் போல பலசாலி என்று தமிழில் பொருள் வரும்.

ஆங்கிலமும் தமிழும் கலந்து உருவாகும் ஒரு கலவை மொழி எந்த விதத்தில் சரி? பொது மக்கள் பயன் படுத்துகிறார்கள் என்பதற்காக ஒரு தவறான பொருள் கொடுக்கும் சொல் சரியான சொல்லாகி விடுமா?

பழங்கால சின தேசத்தில் அரசர்களும், செல்வந்தர்களும் தங்கள் துணிகள் நேர்த்தியாக இருக்க, இரும்புப் பாத்திரத்தில் எரியும் நிலக்கரியைப் போட்டு பாத்திரத்தின் சூடான அடிப்பகுதியில் கொண்டு சுருக்கங்களைத் தேய்த்தனர். 17ம் நூற்றாண்டுகளில் இந்த இரும்புப் பாத்திரங்கள். ஓரங்களில் துவாரங்கள் கொண்ட முக்கோண வடிவ பெட்டிகள் ஆகின. நிலக்கரி கொண்டு சூடாக்கப்பட்ட பெட்டிகள்,சில சமயங்களில் எண்ணெய்கள் கொண்டும் சூடாக்கப்பட்டன. இந்தச் சின்ன மாற்றத்தினால் ஒரு வண்ணான் தன் சேவையை விட்டுச் சமையலறையில் இருந்து நான்கு சக்கரங்கள் கொண்ட வண்டியில் ஏற்றிக் கொண்டு தெருத் தெருவாகத் தேடி தன் பணியைச். செய்ய முடிந்தது. இன்று மின் தேய்ப்புப்பெட்டிகள் வந்து விட்ட காரணத்தால் அவர்கள் நடமாடும் வண்டிகளை விட்டுக் கடை களைத் திறக்க ஆரம்பித்து உள்ளனர். ஆனாலும் மின்சாரம் இல்லாத நிலையில் நிலக்கரி இஸ்திரிப் பெட்டிகளே பல நேரங்களில் இஸ்திரி செய்பவர்களுக்கு கை கொடுக்கின்றன.

தேவைக்கேற்ப தொழில் கருவிகளில் வரும் மாற்றம் ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் கொண்டு வருகிறது. ஆனால் நம்முடைய அன்றாடப் புழக்கத்தில். தேவைக்காகப் பயன் படுத்தும் மொழி மட்டும் தேய்ந்து, பொருள் மாறி கீழ் முகமாகச் செல்கிறது?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Meta

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org

வாசித்து மகிழ

Autism Life poem Thathithaa thoothuthi இயற்கை கொண்டாடலாம்! சிறுவர் நூல் நினைவுகள்.... மரத்தின் கவிதை வெற்றி நிச்சயம்!
Powered by WordPress.
Theme: Tiles by Viva Themes.